
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, திரு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்… ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி நடந்ததோ, மாதிரி போராட்டம் நடைபெறும் என்று சொன்னார். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது மாநில பிரச்சனை. இது தேசிய பிரச்சனை. நீட் தேர்வு என்பது தேசிய அளவில் இருக்கிறது. ஒரு மாநிலத்தில் நடக்கின்ற பிரச்சனை அல்ல. தேசிய அளவில் இருக்கிறது.
இந்திய கூட்டணியில் அமைத்திருக்கிறார். அந்த தேசிய தலைவர்கள் எல்லாம் சொல்லட்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லுங்கள்…. 2010 டிசம்பர் 21 நோட்டிபிகேஷன் போட்டது காங்கிரஸ் ஆட்சி. அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த திரு. காந்தி செல்வர்கள் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தார். அப்பொழுதுதான் இந்த நீட் தேர்வு அறிமுகப்படுத்தினார்கள். ரெக்கார்ட்டோடு பேசிட்டேன்.
சட்டமன்றதிலும் பேசி விட்டேன். கொண்டு வந்து இவர்கள்…. அதை எதிர்ப்பது இவர்கள், இதுதான் வேடிக்கை. அதோடு 50 லட்சம் பேர் கிட்ட கையெழுத்து வாங்கிறார்களாம். கையெழுத்து வாங்கி எங்கு கொண்டு கொடுக்க போகிறாய் ? எப்படி ஏமாற்ற வேலை பாருங்கள்… நீட் தேர்வை இரத்து செய்வோம்… இரத்து செய்வோம் என்று சொல்லி, பல மாணவர்கள் உயிரைப் பறித்து தான் இந்த திமுக கட்சியின் சாதனை. மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணம் திமுகவினுடைய தவறான அணுகுமுறை என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என தெரிவித்தார்.