
செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, முதலில் நான் பதில் சொல்லிவிட்டேன். வெள்ளை அறிக்கை நான் குடுத்தாச்சு. இனி அவர் உட்கார்ந்து ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை எல்லாம் பாடப் புத்தகத்தையும் மரியாதைக்குரிய அண்ணாமலை தம்பி அவர்கள் உட்கார்ந்து அதை படிக்க வேண்டும். படித்த பிறகு அவரே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு விடுவார் என்று நான் நம்புகிறேன்.
சாவர்கர் விடுதலை போராட்ட வீரர் என்று அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நாம் அவர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து…. ஆங்கில ஆட்சிக்கு அடிபணிந்து… என்னை எப்படியாவது விடுதலை செய்துவிடுங்கள் என அவர் எழுதிய கடிதங்கள் எல்லாம் இன்றைக்கு சமூக வலைதளத்தில் வந்து கொண்டு இருக்கின்றது.
மற்ற சுதந்திர வீரர்கள் போல உயிரை பணிய வைத்து… நாட்டுக்கு விடுதலைக்காக உழைக்கவில்லை… இந்திய பிரிட்டிஷ் அரசுக்கு பணிந்து… பயந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர். அதனால் அவரை பற்றிய வரலாறு மக்களுக்கு நன்றாக தெரியும். அதைபற்றி பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. சாவர்கர் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் இணைத்தால் நான் கண்டிப்பாக எதிர்ப்பேன்.
நான் சொன்னது மாதிரி அவர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர். அவரை சுதந்திர போராட்ட வீரர் என்று சொல்ல முடியாது. பிரிட்டிஷ் அரசுக்கு பணிந்து, பயந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவரை ஒரு விடுதலை போராட்ட வீரராக நம்ம அங்கீகரிக்க முடியாது. அதனால் அதை தொடர்பான விஷயங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறுமா ? இல்லையா ? என்பதை முதல்வரும், கல்வித்துறை அமைச்சரும் தான் இனிமேல் முடிவு பண்ண வேண்டும் என தெரிவித்தார்.