செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  மழை நீர் வடிகாலை பராமரிக்காத காரணத்தினால்….. முழுமையாக பராமரிக்கப்படாததனால் இன்றைக்கு மழை நீரை வெளியேற்றுவதில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றார்கள்..   இந்த அரசு செயல்படாத அரசாக இருக்கிற காரணத்தினாலே….  எப்போது கும்ப கர்ண தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும் இந்த அரசு என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒட்டுமொத்தமாக இந்த தீபாவளி திருநாள் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தருகின்ற திருநாள் அல்ல, துன்பத்திருநாளாக தீபாவளி திருநாள் மாறி இருப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை…  எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் அய்யா எடப்பாடியார் அவர்களுடைய வழிகாட்டுதலின் ஆணைக்கு இணங்க சந்தித்து முறையிடும்போது  மாநகராட்சி கமிஷனரும் அந்த கூட்டத்தில் இருந்தார்கள்.

அவரிடத்திலும் முறையிட்டோம்.  100 வார்டுகளிலும் மதுரையிலே அனைத்து சாலைகளுமே இன்றைக்கு சேதாரம் அடைந்திருக்கிறது.  நாங்கள் கூட ஏற்கனவே சுட்டிக்காட்டினோம்… தண்ணீருக்குள் சாலையா  அல்லது சாலைக்குள் தண்ணீரா ? என்ற  அளவிலே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

நீர் உறிஞ்சுகிற பம்ப் செட் வைப்பது பேரிடர் மேலாண்மையின் ஒரு அங்கம். மழைக்காலங்களில் அங்கங்கே தாழ்வான பகுதிகள்…. மழை நீர் தேங்குகிற பகுதிகளில்… பம்ப் செட் வச்சு, தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போது அங்கே பம்பு பண்ணாங்க. இந்த மாதிரி எல்லா இடங்களிலும் பம்பிங் பண்ணினால்,  தண்ணியை வெளியேற்றலாம். ஆனால்  எனக்கு தெரிஞ்சு எந்த இடத்திலும் பம்பிங் பண்ணதா ? தெரியல..

திருமங்கலம் தொகுதியில்  கூட பல இடங்களில் பார்த்தீங்கன்னா  தண்ணீர் தேங்கி  நிக்குது. இதெல்லாம் பம்பிங் பண்ணி வெளியேற்றனும்.  அப்பதான் இதற்கு ஒரு தீர்வு காண முடியும். இவங்க என்னடானா மண்ணை போடுறாங்க. இதை சொன்னவுடனே மாவட்ட ஆட்சியர் தலைவரும்,  மாநகராட்சி கமிஷனரும்  ஏத்துக்கிட்டாங்க. இது நியாயமானது தான்….  மண்ணு கொட்டனா அது கரைந்து போயிடும்.   பார்க்கலாம் என்ன  நடவடிக்கை எடுக்கிறார்கள்  என தெரிவித்தார்.