செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது….   சிப்காட் தொழிற்பேட்டைக்காக 1163 ஏக்கர் தரிசு நிலங்களை எடுத்துத்தான் அங்கே சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது.  அப்படி நீங்கள் ஏதாவது சிப்காட் தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்று சொன்னால்,  தரிசு நிலங்களை எடுங்கள். புறம்போக்கு நிலங்களை எடுத்து அதிலே தொழில்பேட்டை கொண்டு வாங்கள்,  அதை வேண்டாம் என்று சொல்லவில்லை.

பொதுப்பணித்துறை அமைச்சர் அதற்கு ஒரு விளக்கத்தை அளித்து இருக்கின்றார். நாங்க ஒன்னும் சும்மா அந்த நிலத்தை எடுக்கல.  அந்த விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்கிறோம் என்று சொல்கிறார். அதோடு 55 தொழில் பேட்டை வருவதாகவும்,  அதிலே பல்லாயிரக்கணக்கான நபருக்கு வேலைவாய்ப்பு தருவதாக சொல்லுறாங்க. ஏற்கனவே அவர்கள் சொந்த பூமியில் வேலை செய்பவர்களுக்கு….  அந்த நிலத்தை எடுக்கும்போது அவங்க வேலை இல்லாமல் தவிக்கிற சூழ்நிலை ஏற்படுகிறது.

விவசாயிகளை பொறுத்த வரையும் விவசாயத்தை விட்டு வேறு எந்த பணியும் அவர்களுக்கு தெரியாது. ஆகவே காலம் காலமாக தன்னுடைய சொந்த பூமியில் இருந்து அகற்றுவதற்கு இந்த அரசு கடும் முயற்சி எடுக்கிறது. அது மட்டுமல்ல,  எதோ  பெரிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் சண்டை வந்தால்,  எப்படி வேலி அமைச்சு….  கனரக வாகனங்கள் எல்லாம்  வைத்து அதை தடுக்க முடியுமோ,  அப்படி ஒரு செயல்பாட்டை இந்த அரசு செயல்படுத்துகிறது, இது  கண்டிக்கத்தக்கது.

உடனடியாக விடியா திமுக அரசு,  விவசாயிகளை பழிவாங்குவதை விட்டுவிட்டு….  விவசாயிகள் காலம் காலமாக அவர்கள் வேளாண் செய்து வருகின்ற  நிலத்தை பறிக்காமல்,  அவர்களுடைய நிலம் அவர்களுக்கு உடமையாக்கப்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் ஊடகத்தின் வாயிலாக பத்திரிக்கையின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.