செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  எங்களை பொறுத்தவரை இந்த கட்சியை வழிநடத்துவதற்கான தகுதி, திறமை, ஆற்றல்……  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இருக்கின்ற திராவிடம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள்…..  எனக்கு ஆரியம்,  திராவிடம் அதெல்லாம் புராணம் என்கிறார்கள். நல்லா புரிஞ்சுக்கோங்க….திராவிடம் என்றால் 3ஆம் கிளாஸ் புள்ள கூட சொல்லும்….

தேசிய கீதத்தில் இருக்கிறதா ? இல்லையா ?   திராவிடம் என்ற வார்த்தை  தேசிய கீதத்தில் இருக்கிறது. அந்த அடிப்படை விஷயம் தெரியாத ஒருவர்… பொது அறிவும், பொதுவான அறிவும் அற்றவராக ஒருவர் இருக்கிறார். திராவிட பேரியக்கமான அண்ணா திமுகவை வழிநடத்துவதற்கான தகுதிகள் அற்ற ஒருவராக இருக்கிறார்.

அண்ணா திமுகவை வழிநடத்த அறிவு இருக்க வேண்டும், திறமை இருக்கணும், இதெல்லாம் இல்லாட்டினாலும் அனைவரையும் அரவணைத்து போகிற தாய் உள்ளம்,  பண்பு இருக்கணும். எதுவுமே இல்லாம பணம் என்ற ஒன்றை தவிர்த்து…. பணத்தை தவிர்த்து விட்டு… எடப்பாடி யார் ? சொல்லுங்க….

பணம் மட்டுமே பிரதானமே என்று சொன்னால் நாட்டின் பிரதமராக அம்பானி அல்லவா வரவேண்டும். டீக்கடை வைத்திருந்த மோடி எப்படி வந்திருந்தார் ? தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மூன்றாவது வகுப்பு படிக்காதவராக இருந்த ஏழைத்தாயின் பிள்ளையாக இந்த காமராஜர் எப்படி வந்தார் சொல்லுங்க ?  பணம் தான் பிரதானம் என்பதெல்லாம் பொய்.  பணம் என்பது மக்கள் ஜனநாயகத்தின் முன்பு மண்டியிட்டு தோற்று ஓடும். உங்களிடம் தர்மம்,  நியாயம் இருக்கிறதா ? என தெரிவித்தார்.