
திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், எதிரி சொல்லுகிறான்…. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைமை பொறுப்பிலிருந்த முன்பினி என்று சொல்லக் கூடியவன் 1798ஆம் ஆண்டு தன்னுடைய கவர்னர் மார்க்வெஸ் என்கிறவனுக்கு எழுதுகிற கடிதத்தில் சொல்லுகிறான்.
நாங்கள் இந்தியாவில் ஒருவனை கண்டு… எங்கள் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் படையே அஞ்சுகிறது. அந்த ஒருவன் திப்பு சுல்தான் என்கிற மாமன்னன் என்பதை எதிரி வரலாற்று பக்கத்தில் பதிவு செய்திருக்கிறான் தெரிந்து கொள்ளுங்கள் நாக்பூர் கும்பல்களே.. அது போன்று நம்முடைய சக ஆற்காடு நவாப், தொண்டைமான் உள்ளிட்டவர்கள் ஆங்கிலேயர்களுக்கு பின்னால் அவர்கள் அணி சேர்ந்த போது சமரசம் அற்று, ஜாதி மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்….
எந்த மதத்தினருக்கு சார்ந்தவராக இருந்தாலும்…. அவன் எந்த கோட்பாட்டை ஏற்றவனாக இருந்தாலும்…. இன்றைக்கு எத்தனையோ திட்டங்கள் எல்லாம் வருகிறது அல்லவா…. அந்த திட்டங்களுக்கு முன்னோடியாக…. 250 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிலத்தில் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று தனது ஆட்சியில் சட்டம் இயற்றிய மகத்தான ஜனநாயக சக்தியாக திகழ்ந்தவன் மாவீரன் திப்பு சுல்தான்.
சென்னை மாகாணத்தை போல் அல்லாமல் மைசூர் அரசில் தலித் சமுதாயத்தினருக்கு பல இடங்களில் நிலங்களை வழங்கி தலித் மக்களை சமமாக தன் ஆட்சிக் காலத்தில் பாவித்த சமூக நீதி போராளியாக அன்றைக்கு திகழ்ந்திருக்கிறார். ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லண்ணா துயரத்தில் ஒரு காலத்திலும் நமது ஆட்சியை துன்புறுத்தாது என்று சொல்லி இருக்கிறான். வரி வசூல் செய்யும் ஊழியர்களிடம் எந்த சூழ்நிலையிலும்…
நீங்கள் என்னுடைய ஆட்சியில் விவசாயிகளிடத்தில் அவர்களை துன்புறுத்தல் செய்வதற்குகோ, வரி வசூல் செய்வதற்கோ அவர்கள் எந்த நேரத்திலும் முகம் சுளித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறான். எனக்கு தெரிந்து சுதந்திர இந்தியாவில் பல நேரங்களில் விவசாயிகள் வாங்கிய கடன்களுக்காக வீட்டின் கதவுகளை கழட்டிய நம்முடைய இந்திய அரசு அதிகாரிகளை நான் பார்த்திருக்கிறேன்….
வீதிகளில் தண்டோரம் அடிப்பார்கள்… ஊர்களிலே இருக்கின்ற கிராம நிர்வாக உதவியாளர் தலையாரியை அனுப்பி… வீதிகளிலே தண்டாரோ அடித்து, வீடுகளிலேயே ஜப்தி செய்ய வருகிறோம் என்று சொல்வார்கள். ஆனால் 250 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வயிற்றுக்கு உணவிட்ட ….. இந்த விவசாயிகள் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக…. வரி வருவாய்க்கு சொல்கின்ற தனது அதிகாரிகளுக்கு, எந்த இடத்திலும் விவசாயிகள் கண்ணீர் சிந்தக்கூடாது என்று கண்ணியம் காத்த பெருமகனாராக நம்முடைய மாமன்னன் திப்புசுல்தான் என்பதை வரலாற்றுச் செய்திகள்.
இந்துஸ்தான் முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்களையும், 20 வணிக கப்பல்களையும், மைசூர் அரசின் கப்பல் துறையையும் உருவாக்கி அதை எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பரவ செய்வதற்கு திட்டம் வகுத்திருந்தார் என்று வரலாற்று பக்கங்கள் சொல்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் பேசு பொருளாக இருக்கிற கஞ்சா, அபின், போதை, இந்த போதை வாஸ்துகள் என்கிற மது பழக்கங்கள் தனது ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதற்காக தன் ஆட்சிக் காலத்தில் அதை முழுவதும் தடை செய்த மகத்தான மது ஒழிப்பு போராளி சேலத்தில் சசிபெருமானின் முப்பாட்டன் எங்கள் திப்பு சுல்தான்.
எல்லா சமுதாய மக்களும் வணங்குகிற ஆலயங்களுக்கு இன்னைக்கு தமிழ்நாடு அரசு நம்முடைய பள்ளிகளுக்கு… நம்முடைய மசூதிகளுக்கு…. இன்றைக்கு கஞ்சிக்கு நோன்பு நேரங்களில் அரிசி தருகின்றது அல்லவா, இந்த சிந்தனையை…. இந்த இயக்கங்களுக்கு விதை போட்ட தலைவன்….. மகத்தான மாவீரன் திப்பு சுல்தான் என்பதை வரலாற்று பக்கங்களில் பதிந்து கிடக்கின்றது. அனாதையாக சுற்றி திரிகின்ற இந்து பெண்களையும், குழந்தைகளையும், தேவதாசி முறை என்கின்ற முறையில் கொண்டு போய்…. கோவில்களே போட்டுக்கட்டி விட்டு,
குறிப்பிட்ட மன்னர்களுக்கும், ஜமீன்களுக்கும் அவர்களுடைய கற்பு சூறையாடப்பட்ட கொடுமைகளுக்கு முடிவு கட்டி… அதை தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தடை செய்த மகத்தான தலைவனாக மாவீரன் தீப்பு அவர்கள் திகழ்ந்து இருக்கிறார்கள். இங்கே அருமை சகோதரர் அலீம் புகாரி அவர்கள் குறிப்பிட்டது போல், எந்த அரசாங்க வேலையாக இருந்தாலும், கூலி கொடுக்காமல் அந்த மக்களின் உழைப்பு சுரண்டலை செய்யக்கூடாது என்று தடை விதித்து ஆணையிட்ட சமதர்ம சமத்துவத்தின் காவலனாக மாவீரன் திப்பு திகழ்ந்து இருக்கிறார்.
அப்பாவிகள் மீது போர் தொடுக்க தடை விதித்தார். கோவில் மணி ஓசைக்கும், பள்ளிவாசல் பாங்கு அழைப்பிற்கும், சம மரியாதையை தந்திட்டார். ஆனால் இதையெல்லாம் வரலாற்றில் தெரிந்து கொள்ளாத கத்துக்குட்டிகள்…. பாங்கு ஒலிக்கிறது என்று, தற்போது கத்துக்குட்டிகள் கத்தி கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எண்ணி பாருங்கள் வரலாற்றில் நெப்போலியனை நேருக்கு நேர் எதிர் கொண்ட பிரிட்டிஷ் படையின் தளபதி சொல்லுகிறான் என தெரிவித்தார்.