
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், இரட்டை இலை எடப்பாடிக்கு தான் போய் சேரும் என்று நீங்கள் எப்படி முடிவு செய்வீங்க ? தேர்தல் ஆணையம் எங்கே அங்கீகரித்தது ? தேர்தல் ஆணையம் நீதிமன்றதிலேயே சொல்லியிருக்கிறது…. ஜூலை 11 எடப்பாடி பொதுக்குழு தீர்மானங்களை நாங்கள் ஏற்கவில்லை. அப்போ எங்களை நீக்குனது செல்லாது என்று தானே சொல்லி இருக்கிறது, நாங்கள் ஏற்கவில்லை என்று தானே சொல்லியிருக்கிறது….
இன்னும் சொல்லப்போனால் 2021இல் தேர்வு செய்யப்பட்ட இரட்டை தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி 2026 வரை செல்லும் என்று தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவுகளில் இருக்கிறது. என்ன சொல்லி இருக்கிறது என்றால் ? இதன் உரிமையியல் வழக்கின் அடிப்படை வழக்கின் தீர்ப்பு வருகிற வரை…. இடைக்காலமாக கொடுத்திருக்கக்கூடிய ஒரு சின்ன நிவாரணம்.
காரணம் எனென்னவென்றால் , நிர்வாகிகள் அதிகமாக அங்கு இருக்கின்றார்கள். தொண்டர்களை அளக்க முடியாது. நீதிமன்றத்தால் நிர்வாகிகளை அளக்க முடியும். அந்த நிர்வாகிகளை அளந்து பார்த்து நீதிமன்றம் என்ன சொல்கிறது ? அவருக்கு பின்னாடி நிர்வாகிகள் அதிகமாக இருக்கிறார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய இருக்கிறார்கள், அப்படின்னு சொல்லி இருக்காங்க….
1989இல் புரட்சி தலைவி அம்மாவின் பின்னாடி சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு பேர் இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும் ? அன்னைக்கு ஜானகி அம்மா பின்னாடி எவ்வளவு இருந்தாங்கன்னு தெரியும் ? புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோது அவர் பின்னாடி நின்னது துரையரசன் என்கின்ற ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான்…
ஆனால் அரசியலில் நின்றவர்கள் யார் ? தொண்டர்களுடைய நிலைப்பாடு…. மக்களுடைய நிலைப்பாடு தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவனை தீர்மானிக்குமே தவிர, நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எடுக்கின்ற முடிவுகளை மக்கள் மன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவித்தார்.