செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கு… அதை விரிவாக்கம் செய்ய… விடியா திமுக அரசு விவசாயிகளினுடைய விளை நிலங்கள்,  சுமார் 3300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு இருக்கிற விவசாய பெருமக்கள் காலம் காலமாக…  அந்த நிலத்தை பயன்படுத்தி,  வேளாண் பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

அப்படி பண்படுத்தப்பட்டு  நல்ல விளைச்சல் கொடுக்கக்கூடிய….  பொன் விளைகின்ற பூமியை இந்த விடியா திமுக அரசு விவசாயத்திடம் இருந்து பறித்து,  அந்தப் பகுதியிலே சிப்காட் அமைப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.  அதை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அப்படி அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை பழிவாங்குகின்ற விதமாக…  இந்த திமுக அரசாங்கம்,  போராட்டத்தில் ஈடுபட்ட  ஏழு விவசாயிகள் மீது வழக்கு தொடுத்தார்கள்.

ஏழு பேர் மீது குண்டர் சட்டத்தையும் போட்டார்கள். ஆகவே இன்றைக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் இதை எதிர்த்த காரணத்தினாலே….  நாங்களும்  அறிக்கையின் வாயிலாக இதை,  இந்த அரசினுடைய கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக…. 7 பேரில்  6 பேர் குண்டர் சட்டத்தில் இருந்து விலக்கி கொள்வதாக இந்த அரசாங்கம் தெரிவித்து உள்ளது. ஆகவே விவசாயிகள் தங்களுடைய சொந்த நிலம் பறிபோகிறது அதற்காகத்தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

வேறு எந்த போராட்டமும் கிடையாது. ஆகவே ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக…..  சொந்த நிலங்களை பாதுகாக்க  அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை…. கொடுமைப்படுத்துவது,  வஞ்சிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு இந்த அரசு தகுந்த விலை கொடுத்தே ஆக வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதற்குண்டான பலனை அனுபவிப்பார்கள் என தெரிவித்தார்.