செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் தேவை இல்லை என்று நான் இப்ப இல்லை…  நான் நீண்ட நாளாக பேசுகிறேன்…  இவர்கள்  ஆளுநரை  மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்….  நான் அந்த பதவியை தூக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்… ஆளுநர் பதவியை தூக்குவதற்கு கிளர்ச்சி தான். ஆளுநரை கண்டுகொள்ளக் கூடாது. போய்யா…  கையெழுத்து போட்டா போடு, போடலைன்னா போன்னு சொல்லிரனும்…

ஜனநாயகமே கிளர்ச்சியில் வந்தது தான்.  இதுவரை வாழ்ந்தது போல், இனி  எப்பொழுதும் வாழ முடியாது என்ற நிலைமை உருவானால்  மக்களே தானே கிளர்ந்து, எழுந்து புரட்சி செய்வார்கள் என்கிறார் லெனின்.  இலங்கையில் நடந்தது அல்லவா… இலங்கையில் ராஜபக்சே வீட்டிற்கு முற்றுகையிட்டு போராடினார்கள். ஐந்து கார் இருந்தது…  எடுத்துட்டு போனாங்க…

தீ வைத்துக் கொளுத்தினார்கள்… அவன் நினைத்திருந்தால் எடுத்துட்டு போய் இருக்கலாம் அல்லவா ? அவன்  எடுத்துட்டு போகவில்லை..  உன் காராடா எனக்கு முக்கியம்…   சோறு தான்டா முக்கியம் என கொளுத்திவிட்டு போய்ட்டான்.உன் குண்டாஸ் எல்லாம் தூக்கி  போடு..  நாங்க அனுபவிக்காத குண்டாஸ்…. தேசிய பாதுகாப்பா ? என தெரிவித்தார்.