
செய்தியார்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேதகு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் திருச்சியில் ஒரு விழாவில பேசிய பேச்சும், அதே நேரத்தில திமுகனுடைய மூத்த தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர். பாலு அவர்கள் அதற்கு கொடுத்திருக்கக் கூடிய அறிக்கையும் நாம் அனைவருமே பார்த்தோம். கவர்னர் அவர்கள் எழுப்பிக்கக்கூடிய கேள்விகள் மிக முக்கியமான கேள்விகள்.
இது பல காலமாக பல நண்பர்கள் தமிழகத்தில் எழுப்பிக் கொண்டிருக்கின்ற கேள்விகள். ஆளுநர் அவர்களின் கேள்வியினுடைய சாராம்சம் என்ன ? தமிழகத்தினுடைய ஆளுநராக வந்த பிறகு…. கவர்னர் சொல்றது ? தமிழகத்தில் சுதந்திற்காக பாடுபட்ட வீரர்கள், தலைவர்களுடைய பெயரை கேட்ட போது மாநில அரசு எனக்கு அனுப்பிய பட்டியலில் வெறும் 40 பேர் தான் இருந்தாங்க.
கவர்னர் சொல்றாரு… நானாக அதை கண்டுபிடித்து 6,000 பேருக்கு மேல தமிழகத்தில் சுதந்திற்காக பாடுபட்டவர்களின் பெயர்களை நான் எடுத்து இருக்கிறேன். அவர்களுக்கு தொடர்ந்து நான் மரியாதை கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். குறிப்பாக பொதுவெளியில அவர்களுடைய நினைவுகளை போற்றும் வகையில் நான் பேசிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார்.
ஆனால் டி.ஆர். பாலு அவர்கள் கொடுத்து இருக்கக்கூடிய பதிலில் இது எதுவுமே இல்லாம… அவர் எழுப்பிருக்கக் கூடிய கேள்விகளுக்கு பதில் இல்லாமல்…. ஏக வசனத்துல கவர்னரை ஒருமையில் திட்டுவதை மட்டுமே அந்த அறிக்கையில் தன்னுடைய வேலையாக டி.ஆர். பாலு அவர்கள் செய்திருக்கின்றார்.
அடுத்து கவர்னர் அவர்கள் அதோடு நிறுத்தாமல் இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்களை நம் முன்னாடி வச்சிருக்காங்க. குறிப்பாக தமிழகத்தில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்கள் ஜாதி முத்திரையில அடைக்கப்பட்டு, ஒரு குறுகிய வட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.தேசிய தலைவராக உருவெடுக்கப்படவில்லை என்ற குற்றசாட்டை வைத்து இருக்கிறார்கள். இது உண்மை தான என தெரிவித்தார்.