அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா  பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்னைக்கு பாத்தீங்கன்னா… உழைக்கும் மகளிர். வேலைக்கு போகும் பெண்கள். அந்த பெண்கள் உரிய நேரத்திற்கு வேலைக்கு போகணும்…  வேலை முடிந்ததும் வீட்டிற்கு வரவேண்டும். அம்மா இருசக்கர வாகனம் தேர்தல் நேரத்தில் அறிவித்தோம். தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சத்து 77 ஆயிரத்து 64 மகளிருக்கு  அம்மா இருசக்கர வாகனம் வழங்கினோம்.

ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனத்திற்கும் 25, 000 மானியம் கொடுத்தோம், அதையும் நிறுத்திட்டாங்க. தாலிக்கு  தங்கம் சுமார் 12 லட்சம் பேருக்கு கொடுத்தோம். 25 ஆயிரம்…  50,000 ஒரு பவுன் அற்புதமாக கொடுத்தோம். 12 லட்சம் குடும்பத்தை வாழ வைத்த பெருமை அண்ணா திமுககாரனுக்கு. அண்ணா திமுக அரசுக்கு தான் சேரும். நம்முடைய குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவச் செல்வங்கள்…

திறமையான கல்வி.. விஞ்ஞான கல்வி…. அந்த கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காக அம்மா சிந்தனையிலே உதிக்கப்பட்ட அற்புதமான திட்டம் மடிக்கணினி திட்டம். அந்த  சுமார் 52 லட்சம் பேருக்கு மடிக்கணினி கொடுத்து 7,322 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது. அதையும் ரத்து பண்ணிட்டாங்க. அதேபோல 2000 அம்மா மினி கிளினிக். ஒவ்வொரு அம்மா மினி கிளினிக்கிலும்  ஒரு எம்பிபிஎஸ் டாக்டர், ஒரு நர்ஸ்,  ஒரு மருத்துவ உதவியாளர்.

ஏழை மக்கள் எங்கே அதிகமாக இருக்கிறார்கள்…  இந்த சங்கரன்கோவில் தொகுதியில்… தென்காசி மாவட்டத்தில்…. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும்… ஏழை மக்கள் எங்கே அதிகமாக வசிக்கிறார்களோ,  அந்த பகுதியை தேர்ந்தெடுத்து,  அங்கே ஒரு அம்மா கிளினிக் கொண்டு வந்து…. அங்கே டாக்டரை நியமித்து. ஏழை – எளிய மக்களுக்கு அந்த பகுதியிலேயே வைத்தியம்பண்ணுனோம்…  சிகிச்சை அளித்தோம்….

அது கூட பொறுக்க முடியாம இந்த விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அதை ரத்து செய்து விட்டார்கள்.  மீண்டும் அண்ணா திமுக ஆட்சி மலருகின்ற பொழுது மீண்டும் அம்மா மினி கிளினிக் துவங்கப்படும். அம்மா குழந்தைகள் நல பெட்டகம் 219 கோடி… 16 லட்சம் பேர் பயனடைந்தார்கள், அதையும் விட்டுட்டாங்க.. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவி திட்டம். 28 லட்சம் பேர் பயன் அடைந்தார்கள்… 3170 கோடி வழங்கப்பட்டது அண்ணா திமுக ஆட்சியில்…. கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருவில் இருக்கின்ற குழந்தை நல்ல வளர வேண்டும்…

ஏழை குடும்பத்திலே இருக்கின்ற தாய்மார்கள்… கர்ப்பிணி தாய்மார்கள்….. தங்கள் கரு நன்றாக வளர வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு 4000 மதிப்புள்ள தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கப்பட்டது அண்ணா திமுக ஆட்சி….  அதேபோல எப்பொழுது பார்த்தாலும் திரு.ஸ்டாலினும்,  அவருடைய மகன் திரு.உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வு, நீட் தேர்வு என்று எங்கே பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார்.