தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குகின்றது. சமூக நீதி பேச திமுக அரசுக்கு அருகதை இல்லை என அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜன்கண்ணப்பா,

பிரதமருக்கு C.M  லெட்டர் எழுதி இருக்காரு. முதல்ல சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஒத்து வரணும். அதுக்கப்புறம் தானே ஸ்டேட் கவர்மென்ட் நடத்த முடியும். அதை கேட்டு தானே தலைவர் லெட்டர் எழுதி இருக்காரு.

அன்புமணி சொல்றது தனியா இருக்கட்டும். அன்புமணி சொல்றத பத்தி நான் கவலைப்படல. பிரதமருக்கு தலைவர் லெட்டர் எழுதி இருக்காரு.

பெர்மிஷன் வந்ததும் முறைப்படி நடத்தணும்னு முடிவெடுத்திருக்கார்.  அதான் முடிவே ஒழிய  அன்புமணி சொல்றதெல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது என தெரிவித்தார்.