விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  அம்மாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தை நான்கரை ஆண்டு காலம் சிறந்த ஒரு முதலமைச்சராக… ஏழைகளின் உடைய முதலமைச்சராக…  ஏழைகளின் உடைய துன்பங்களை தெரிந்து அதற்கு உழைத்த ஒரே முதலமைச்சர்.   இந்த கட்சி நான் பொதுச் செயலாளராக வருவேன்,  முதலமைச்சராக வருவேன் என எடப்பாடி பழனிச்சாமி நினைச்சாரா ?

1972இல் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கின்ற போது திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த கட்சியிலே சாதாரண ஒரு உறுப்பினர். அவர் கனவு கண்டு இருப்பாரா ? இந்த மாதிரி கூட்டம் போட்டால் உங்களைப் போல  எங்கேயோ ஒரு மூலையில் நின்னுட்டு இருந்திருப்பார். அதற்குப் பிறகு இந்த இயக்கத்தில் சாதாரண கிளைக் கழக செயலாளர்.  பிறகு ஒன்றியத்தில்சின்ன பொறுப்பு.

பிறகு ஒன்றிய கழக செயலாளர். 1989இல் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் ஜா அணி , ஜெ அணி என பிளவுபட்ட போது அம்மாவின் பக்கத்திலே உறுதியாக நின்று…  எடப்பாடி தொகுதியிலே முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுகிறார். 1991இல் மாவட்ட கழக செயலாளர்,  சட்டமன்ற உறுப்பினர்,  பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக தோல்வி அடைகிறார்.

2001இல் அவருக்கு சீட்டே இல்ல.  போட்டியிடுவதற்கும் வாய்ப்பில்லை. வாய்ப்பு கொடுக்கலைன்னு இல்லை,  அந்த தொகுதி கூட்டணியிலே பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. 10 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தில் எந்த பொறுப்பிலுமே இல்லை.   பொறுப்புகள் இருந்தாலும்,  இல்லை என்றாலும் அம்மாவின் மீது விசுவாசமாக…  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசம் மிக்க ஒரு தொண்டனாக…  இந்த இயக்கத்திற்காக பாடுபட்டார்.

2011இல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்…  முதல் முறையாக அமைச்சர் பொறுப்பை ஏற்கின்றார். திடீரென்று அம்மா அவர்கள் மறைகிறார்கள். அம்மாவின் மறைவிற்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினரால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டவர் தான் திரு எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தினுடைய முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறார்.

இன்றைக்கு பல்வேறு சட்டப் போராட்டங்கள்…. பதவிக்காக எதிரிகளில் மட்டுமல்ல,  துரோகிகளும் சேர்ந்து இந்த இயக்கத்தை காட்டி கொடுத்து…  எந்த இயக்கம் தங்களை வளர்த்ததோ  அந்த இயக்கத்தை எட்டி உதைத்து… திமுகவோடு நேரடியாக தொடர்பு வைத்துக்கொண்டு….  இந்த இயக்கத்தை அழிக்க பார்த்தவர்கள் எல்லாம்….  தொண்டர்களுடைய பலத்தோடு,  துணையோடு..  அத்தனையும் முறியடித்து,  அனைத்து நீதிமன்றங்களிலும்…..  உச்ச நீதிமன்றம் வரை சென்று… இன்றைக்கு கழகத்தை மீட்டெடுத்து,  முடக்கப்பட்ட சின்னத்தையும் மீட்டெடுத்து,  இன்றைக்கு மிகப்பெரிய ஒரு இயக்கமாக உருவாக்கி காட்டி இருக்கிற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

அவர் நாம் இப்படி வருவோம்னு நினைச்சாரா ? அண்ணா திமுகவில் இது எப்படி நடந்தது ? திமுகவில் நடக்குமா ? சாதாரண திமுகவின் தொண்டர் வர முடியுமா ? கிட்டத்தட்ட 75 ஆண்டுகாலம் திமுக…  பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு….. எம்ஜிஆர் உடைய தயவால்…. எம்ஜிஆர் போட்ட பிச்சையால் முதலமைச்சரான கருங்காலி  கருணாநிதி… தமிழ்நாட்டிற்கு பிடித்த சனியன் திமுக என கடுமையாக விமர்சனம் செய்தார்.