ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் குறைக்கப்படுவதாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில் ஆவின் பாலகங்கள் மற்றும் பால் முகவர்களுக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நடத்தப்பட்டுள்ளது. பச்சை நிற பாக்கெட் பால் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஊதா நிற பாக்கெட் பாலும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது