செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, வேங்கைவயலை தொடர்ந்து நாங்குநேரியில் நடந்திருக்க கூடிய விஷயத்தை பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல கட்சிகள் மௌன விரதத்தில் இருப்பதாக பார்க்கிறோம். 240 நாட்களுக்கு மேல் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் ஒருவரை கூட அரெஸ்ட் பண்ணவில்லை. ஊரெல்லாம் DNA சோதனை செய்தார்கள்.
DNA சோதனைக்குட்படாதவரை கோர்ட்டுக்கு போய் பரிசோதனை செய்தீர்கள், என்ன ஆச்சு ? என்ன நடவடிக்கை எடுத்தோம் ? என இத பத்தி ஏன் இன்னும் பிரஸ் ரிப்போர்ட் கொடுக்க மாட்டேங்கிறீங்க.. நாங்குநேரியில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லக்கூடிய பள்ளிக்கூட வளாகத்தில் ஜாதியை வைத்து மிகப்பெரிய கொடூரமான அட்டாக் நடந்திருக்கு.
முதலமைச்சர் அவர்கள் இந்த நேரத்துல படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வீட்டில்…. இதையெல்லாம் பாருங்க.. அதனால் முதலமைச்சரை பொறுத்தவரை அரசியல் அரசியல் அரசியலை தான் முதலமைச்சரான பிறகும் அதை செய்கிறார். எதிர்க்கட்சித் தலைவராகத்தான் அவர் நடத்துகிறார். இன்னும் வேண்டா வெறுப்பு விதைக்கின்றார். இன்னுமே வன்மத்தை தூண்டுகின்றார். மத்திய அரசுக்கும் – மாநில அரசுக்கும் ஒரு விரோத போக்கை கடைபிடிக்கிறார். ஆட்சியில் இருக்கக்கூடிய ஒரு மனிதருக்கு இது அழகல்ல.
திருமாவளவன் மௌன விரதத்தில் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் அவர்களை பார்த்தேன்… இது ஆர்எஸ்எஸின் சதி என்றார்கள். இதற்கு சிரிப்பதா ? அழுவதா ? என்று தெரியவில்லை. எங்கேயும் பேசும்போது தமிழகத்தில் எது நடந்தாலும் ? இது ஆர்எஸ்எஸ்_ஸின் தி என்ற ”சிங்கிள் லைன்” டயலாக் திருமாவளவன் வைத்திருக்கிறார். இதைத்தவிர மேலையும் போகமாட்டார், கீழேயும் போக மாட்டார். ஏனென்றால் தோழமை சுடுதல்.. அந்த அளவுக்கு துரதிஷ்டவசமாக தமிழகத்தில் சில அரசியல் கட்சியின் தன்மை. இதுல என்னாச்சு ? என்றால் சாயம் வெளுத்து விட்டது என தெரிவித்தார்.