
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருமண இணைய சேவையில் அறிமுகமாகும் நபர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் முன்பு எந்த ஒரு தகவலையும் பகிர வேண்டாம் என்று தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருமணம் ஆகாத மற்றும் இரண்டாம் திருமணத்திற்கு வரம் தேடும் ஆண் மற்றும் பெண்களை குறி வைத்து பல இணைய சேவை மையங்கள் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இதில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக விளம்பரப்படுத்தி வருவதுடன் அழகான பெண்கள் அல்லது ஆண்கள் புகைப்படங்களை வெளியிடும் ஆர்வத்தை தூண்டுகின்றனர். பெரும்பாலான இணைய சேவைகளின் பலரும் போலி கணக்கு தொடங்குகின்றனர். அதில் திருடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்தி இணைப்பைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபடுகிறார்கள். எனவே ஒரு நபரை சந்தித்து அவர் மீது நம்பிக்கை ஏற்படாத வரை எந்தவித பண பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று திருமண வரன் தேடுபவர்களை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.