தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் மதிப்பெண் விவரம் வழங்கப்பட்டது. அதன் பிறகு உயர் கல்வியில் சேர தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது துணை தேர்வும் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ முடித்த அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த சான்றிதழ்களை இன்று வெற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் படிக்காமல் தனித் தேர்வு எழுதியவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.