
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இணையவழியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடைமுறைப்படுத்த கால தாமதம் ஏற்படுவதால் பழைய முறைப்படி நேரடியாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இலவச பஸ் பாஸ் தெரு மாணவர்களின் விண்ணப்பங்களை மண்டல போக்குவரத்து கழகத்தில் உடனே சமர்ப்பிக்கவும். அதனை கூகுள் ஷீட்டில் பூர்த்தி செய்து அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.