தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை காலை தொடங்குகிறது..

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு குழு அறிவித்துள்ளது. ஜூலை 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 7 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியான நிலையில் எம்.பி.பி.எஸ் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு 20ம் தேதி தொடங்கிய நிலையில், நாளை முதல் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..