தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிவேல் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
Breaking: அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்து பயங்கர விபத்து… 42 தகரக் கொட்டகை வீடுகள் சேதம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் தகரக் கொட்டகை வீடுகள் உள்ளது. இந்த கொட்டகை வீடுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த கொட்டகை வீடுகளில் இருந்த நான்கு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில்…
Read moreகடலூர் ரயில் விபத்தில் திடீர் திருப்பம்….! தொலைப்பேசி அழைப்பை ஏற்காமல் கேட் கீப்பர் தூங்கியது உறுதி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
செம்மங்குப்பம் அருகே கடந்த வாரம் நடந்த சோகமான விபத்தில், பள்ளி வேனுடன் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர்…
Read more