நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது.வாகனம் ஒடுக்குபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி சாலைகளில் சிசிடிவி கேமரா. போலீஸ் காரில் டேஷ் போர்டு கேமரா, போலீசாரின் உடலில் கேமரா ஆகியவை பொருத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு வீடியோ பதிவின் மூலமே அபராதம் விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உடனடியாக அவை நடைமுறைக்கு வர இருக்கின்றன.