டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆன திரைப்படம் “தசரா”. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரூபாய்.38 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.
இத்திரைப்படததுக்காக கீர்த்திக்கு வாழ்த்து சொல்லி நடிகர் சூரி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல் டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் விடுதலை திரைப்படத்திற்கு வாழ்த்து சொல்லியும், தசரா படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தும் கீர்த்தி சுரேஷ் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
Thank you so much @sooriofficial Anna!
என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் பெறும் வெற்றிபெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤗🤍— Keerthy Suresh (@KeerthyOfficial) March 31, 2023