
இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார். அதில், “Golden Hours” இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கக்கூடாது என இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கினோம். அதில் அரிகிருஷ்ணன் 1,50,000-வது நபராக பயனடைந்துள்ளார் என நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார். இது சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டம் ஆகும்.
சொன்னதைச் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம்!
Golden Hours-இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென #இன்னுயிர்காப்போம் திட்டம் தொடங்கினோம். இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார்.
அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன். pic.twitter.com/iuuzbQKM2P
— M.K.Stalin (@mkstalin) March 16, 2023