ராஜஸ்தான் மாநிலம் டட்டா பகுதியை சேர்ந்த யஷ்பால் சிங் என்பவர் பாலாஜி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வாந்தி எடுத்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வீட்டுக்கு வந்தனர். உடல்நிலை மோசமாகி கிடந்த அவரை மீட்டு அருகே உள்ள மன்மோகன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சோனோகிராபி மற்றும் எண்டோஸ்கோபி மூலம் ஆய்வு செய்ததில் அவரின் வயிற்றில் கத்திகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலமாக 56 பிளேடுகளும் அகற்றப்பட்டன. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.