தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இப்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பத்துதல படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து சிம்புவின் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. கவுதம் மேனன் டைரக்டில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு சிம்பு 40 கோடி சம்பளம் வாங்கினாராம். இந்த நிலையில் சிம்புவின் 48வது திரைப்படத்துக்காக கமல்ஹாசனிடம் குறைந்த சம்பளமே கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.