தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள எச் 3 என் 2வைரஸ் பாதிப்பு காரணமாக ஆண்டிபயோடிக் மருந்துகள் வழங்குவதை குறைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து வயதினருக்கும் காய்ச்சல் மற்றும் நீடித்த இருமல் பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் காரணமாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு மருந்துகளான ஆண்டிபயோடிக் மருந்துகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் நோய் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.