நடிகர் கூல் சுரேஷ் சிறிய சிறிய வேடத்தில் நடித்து வருகின்றார். இவர் அவ்வபோது என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் திரைப்படத்தில் கூல் சுரேஷ் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பகாசசூரன் திரைப்படத்தை பார்ப்பதற்காக கூல் சுரேஷ் சென்றிருந்தார்.

அப்போது பேசிய போது, இந்த திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என தெரிவித்துக் கொண்டிருந்தார்.  திடீரென அங்கிருந்த பெண்ணை அழைத்து கையை பிடித்துக் கொண்டு முத்தம் கொடுக்குமாறு டார்ச்சர் செய்திருக்கின்றார். அந்த பெண் வேண்டாம் கூறினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.