அறந்தாங்கி நிஷா திருச்சியில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சினிமாவில் என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகின்றார் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி செய்வதில் அசத்தி இருக்கின்றார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவருக்கு நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இத்திரைப்படத்தை தொடருந்து வாய்ப்பு கிடைக்கும் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் youtube தொடங்கி பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் திருச்சியில் தான் கட்டி வரும் புதிய வீட்டின் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.