தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவருக்கும் நடிகர் விஜய்க்கு இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக வதந்திகள் வெளியானது. இதனால் சோசியல் மீடியாவில் பல மீம்ஸ்கள் வந்தபடி இருந்தது. இதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சென்ற 13 வருடங்களாக தனது பள்ளி நண்பரை காதலித்து வருவதாக செய்தி வெளியானது. மேலும் அவர் விஜய்க்கும் அறிமுகமானவர் எனவும் தகவல் வெளியானது. இதனால் அந்த வதந்தி முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷிடம் உங்களின் வருங்கால கணவர் யாரைப் போல இருக்க வேண்டும் என கேட்டு அஜித், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என எட்டு நடிகர்களின் போட்டோக்கள் காட்டப்படுகின்றது. அப்போது கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால கணவர் தளபதி விஜய் போல இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷ் கலாய்த்து வருகின்றார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் தீவிர ரசிகையாவார். மேலும் அவருடன் நல்ல நட்பையும் கொண்டிருக்கிறார். மேலும் சர்க்கார், பைரவா உள்ளிட்ட திரைப்படங்களில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.