தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நவாசுதீன் சித்திக் சமீப காலமாக லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரது மனைவி ஸைனப் என்ற ஆலியா சித்திக் மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெஹ்ரூனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், வீட்டிலுள்ள ஸைனப் என்னுடன் அத்துமீறி பேசுவது, காயப்படுத்துவது மற்றும் தாக்கி வருகிறார்.

ஆகவே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மாமியாரின் புகார் முற்றிலும் உண்மையானது அல்ல என்று ஸைனப் கூறியுள்ளார். இது பற்றி ஸைனப் சித்திக்கின் வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குடும்ப வன்முறை தொடர்பாக புகார் தெரிவித்து வழக்கு தொடர ஸைனபை வெளியே விடாமல் நவாசுதீனின் ஆட்கள் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். எந்த காவல்துறையினரும் ஸைனபை காப்பாற்ற முன்வரவில்லை. எனினும் நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

அதுமட்டுமின்றி ஸைனபுக்கு கடந்த 7 தினங்களாக சாப்பாடு கொடுக்காமல், பாத்ரூம் போக விடாமல், குளிக்கவிடாமல் கொடுமைப்படுத்தி உள்ளனர். இருந்தாலும் அவர் மீது நவாசுதீன் சித்திக்கும், அவரது தாயாரும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு குற்றவழக்குகளை கொடுத்திருக்கின்றனர் என வழக்கறிஞர் ரிஸ்வான் கூறியுள்ளார்.