லஞ்சம் உடலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட நில அளவை பிரிவில் நடந்துவரும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில தாலுகா அலுவலகம் முன்பாக பதாகை வைத்திருக்கின்றார்கள். இதுப்பற்றி கட்சியினர் தெரிவித்துள்ளதாவது, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் நில அளவையர் உள்ளிட்ட அனைவரும் குறுநில மன்னர்கள் போல செயல்படுகின்றார்கள்.

அனைத்து வேலைகளுக்கும் விஏஓ மூலமும் நேரடியாக லஞ்சம் பெறப்படுகின்றது. லஞ்சம் கொடுக்காத விவசாயிகளின் கணினி பதிவேற்றத்தில் திட்டமிடப்பட்டு தவறு செய்யப்படுகின்றது. மேலும் வருட கணக்கில் அவர்களை அலைய விடுகின்றார்கள். இது குறித்து தாசில்தார் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கின்றார். ஆகையால் திட்டமிட்டு அரசின் பெயரை கெடுக்கும் இதுபோன்ற தவறுகளை சரி செய்ய விட்டால் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.