பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் கூலி உயர்வு ஒப்பந்தம் சென்ற மாதம் 31ஆம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில் எவர் சில்வர் பாத்திரம் வகைகளுக்கு 50 சதவீதமும் தாமிரம், பித்தளை, வார்ப்பு வகைகளுக்கு அறுவது சதவீதமும் ஈய பூச்சிக்கு 70% கூலி உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

tமேலும் எவர்சில்வர், பித்தளை பாத்திர உரிமையாளர் சங்கங்களுக்கு கோரிக்கை கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பாத்திர தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க ஒரு வருடம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அதுவரை தற்போது இருக்கும் கூலியே வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

கூலி உயர்வு வழங்காத பட்சத்தில் வருகின்ற ஒன்றாம் தேதி அனுப்பர்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பாத்திரப்பட்டறைகளில் பணிகளை நிறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று பாத்திர உற்பத்தியாளர் சங்கம் முன்பாக கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.