தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மேலும் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், மாநில பொருளாளர் அன்பழகன், மாநில தலைமையிட செயலாளர் ராவணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, திருவண்ணாமலை மாவட்ட தலைவர் தீபக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் முதுகலை ஆசிரியர் பணித்தொகுதியும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணி தொகுதியும் சமம் என்ற நிலையில் பேசப்பட்டது. அதன்படி மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்பது  வலியுறுத்தபட்டது. இதனையடுத்து செய்முறைத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி குறைந்தது 1 வார காலம் நடத்த வேண்டும் என்றும்  கணக்குப் பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.