திருவண்ணாமலையில் சாது வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி காவி உடையில் ஒருவர் கிரிவல பாதையில் நின்று கொண்டிருந்தார். இதன் பின் போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் அவரிடம் இருந்தது தெரியவந்தது. இதன் பின்பு போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை சேர்ந்தவர் எனவும் அவரிடம் 7000 மதிப்புடைய கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. ஆந்திராவில் கஞ்சா வாங்கி திருவண்ணாமலையில் அதிக விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தார்கள். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.