தமிழக மீனவர்களின் மூன்று படகுகள் இலங்கை அரசுடைமை ஆக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற 2021-22 ஆம் ஆண்டுகளில் மீன் பிடிக்க 17 மீன்பிடி படகுகள் சென்ற நிலையில் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. இந்த படகுகள் மீதான விசாரணை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த 17 படகுகள் மீதான விசாரணைக்கு சென்னையில் இருந்து விமான மூலமாக 17 பேர் கொண்ட மீனவர் குழு யாழ்ப்பாணம் சென்றிருந்த 2 நாட்களுக்கு முன்பாக சென்றார்கள்.

அவர்கள் அங்கு சென்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதில் மொத்தம் 17 படகுகளில் நான்கு படைகள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இதற்கான தீர்ப்பு 31-ஆம் தேதியும் 10 படகுகள் மீதான வழக்கு மாற்றி ஒன்றாம் தேதிக்கும் மூன்று விசைப்படகுகளை இலங்கை அரசுடைமையாக்குவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 3 மீன்பிடி விவசாய படகுகள் இலங்கை அரசுடமையாக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.