சென்ற 2019 ஆம் வருடத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்கவும் கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளை சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு அதிக அளவில் இந்த கோல்டன் விசாவை வழங்கி வருகின்றன.

முன்னதாக மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ், விஜய் சேதுபதி, குஷ்பூ, மீரா ஜாஸ்மின், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், இயக்குனர் விஜய் தொகுப்பாளினி டிடி உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கிய நிலையில் தற்போது மலையாள திரை உலகின் பின்னணி பாடகியான அம்ருதா சுரேஷுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது.