தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வலம் வருகிறார். இதையடுத்து சினிமா உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..? என கடந்த சில தினங்களாக தீவிர விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் அன்றும், இன்றும், என்றுமே ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நகரின் முக்கியமான இடங்களில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். அவற்றில் “உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாது. அன்றும், இன்றும், என்றுமே ஒரேஒரு சூப்பர் ஸ்டார் தான். அது தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான். அண்ணாத்த குரூப்ஸ்-திண்டுக்கல் மாவட்டம் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.