நடிகை சமந்தா இப்போது சரித்திர கதை அம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி இருக்கும் சாகுந்தலம் படத்தில் நடித்து உள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க, மணிசர்மா இசை அமைத்துள்ளார்.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் சாகுந்தலம் படத்தில் நடித்திருக்கும் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா தன் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை படக்குழுவானது வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது.