நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இப்போது டைரக்டர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.

“ரன் பேபி ரன்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதை நடிகர் கார்த்தி தன் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டிரைலர் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.