இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிமி இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சிமி அமைப்பில் சட்டவிரோதமான வழக்குகளில் ஈடுபட்டு வருவதாகவும் நாட்டின் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது என்று அவர்களின் கருத்துக்கள் மதச்சார்பற்ற இந்திய நாட்டின் சட்டங்களுக்கு எதிராக உள்ளதால் அவற்றை நீடிக்க அனுமதிக்க கூடாது என்ற மத்திய அரசு தெரிவித்துள்ளது.