காஷ்மீரில் திருமணத்திற்கு பின் கணவர் பாகிஸ்தான் என்பது தெரிந்ததும் இளம் பெண் அவரை பிரிந்து வேறொரு நபருடன் வாழ்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் உத்தம்பூர் பகுதியை சேர்ந்த பெண் பிரியங்கா என்பவர் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி ரோசன் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு ரோஷன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. திருமணத்திற்கு பின்னர் கணவரின் பேஸ்புக்-ன் முகப்பு பக்கத்திற்கு சென்று பார்த்த பிரியங்கா அதில் பாகிஸ்தான் தேசிய கொடியுடன் ரோஷன் இருக்கும் புகைப்படங்களை பார்த்துள்ளார்.

இதன் பின்னர் பாகிஸ்தான் அல்லது துபாய்க்கு சென்று வாழலாம் என்று பிரியங்காவை ரோஷன் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பிரியங்கா கணவரை பிரிந்து சென்றார். இதனால் மனைவியை காணவில்லை என்று ரோஷன் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் பிரியங்கா அதே ஊரைச் சேர்ந்த ஒரு நபருடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. கணவர் பாகிஸ்தான் என்பதால் அவருடன் இணைந்து வாழ விருப்பமில்லை என்றும் கணவர் வற்புறுத்தியபடி பாகிஸ்தான் செல்ல விருப்பமில்லை எனவும் பிரியங்கா கூறியுள்ளார்.