“இந்தியாவில் இருக்கும் 95 சதவீத GenZ இளைஞர்கள் முட்டாள்கள், அவர்கள் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை” என பாட்காஸ்ட் ஒன்றில் நபர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு நாட்டின் ஜனாதிபதி யார் என்று கூட தெரியவில்லை என்றும், இதற்கு அவர்களின் பெற்றோர்களே முழு காரணம் என்றும் அவர் அந்த வீடியோவில் சாடியுள்ளார். “அம்மாக்கள் பார்ட்டிக்கு போகிறார்கள், அப்பாக்கள் கார்ப்பரேட் அடிமைகளாக இருந்துவிட்டு வார இறுதியில் குடிக்கிறார்கள்” என ஒட்டுமொத்த தலைமுறையையும் அவர் விமர்சித்துள்ளது நெட்டிசன்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
Thoughts??💀 pic.twitter.com/UM4BLPST4t
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 2, 2026
இதற்குப் பதிலடி கொடுத்து வரும் GenZ இளைஞர்கள், “ஸ்ட்ரீட் இன்டர்வியூக்களில் வரும் சில மொக்கையான வீடியோக்களை வைத்துக்கொண்டு ஒரு தலைமுறையையே முட்டாள் என்று சொல்வது அசிங்கம்” என வளுவாகப் பேசி வருகின்றனர். முந்தைய தலைமுறையினரை விட தங்களுக்குத் தெளிவான இலக்குகளும், ஸ்மார்ட்டாக வேலை செய்யும் திறனும் அதிகம் இருப்பதாகக் கூறும் அவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் கொத்தடிமைகளாக இருக்கத் தங்களுக்கு விருப்பமில்லை என்றும் நெத்தியடியாகக் கூறி அங்கிள்ஸை அலறவிட்டு வருகின்றனர்.
