பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவரை சோசியல் மீடியாவில் 21 மில்லியன் பாலோ செய்கின்றார்கள். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். அதிலும் குறிப்பாக கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை குவிக்கின்றார்.

இவர் யோகா பயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் ஆர்வம் செலுத்துவார். மேலும் அது குறித்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிடுவார். இவருக்காக ஜிம்முக்கு வெளியே காத்திருக்கும் ரசிகர்களிடம் அன்பாக நடந்து கொள்வார். மேலும் செல்பி எடுத்துக்கொள்ள ரசிகர்களுக்கு அனுமதியும் வழங்குவார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஜான்வியிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதற்கு அவர் சம்மதமும் தெரிவித்தார். இருப்பினும் யோகா வகுப்பை விட்டு வெளியே வந்த போது அந்த ரசிகர் ஜான்வியை சற்று நெருங்கி வந்திருக்கின்றார். இதனால் அசௌகரியமாக உணர்ந்த ஜான்வி சற்று தள்ளி பூந்தொட்டி அருகே சாய்ந்து நின்றார். அவர் ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வரை அமைதியாக இருந்த நிலையில் பின் கார் அருகே சென்ற போது கதவை ஆத்திரத்தில் வேகமாக சாத்தினார். இந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றார்கள். சிலரோ விமர்சனங்களை தெரிவித்து வருகின்றார்கள்.