துணிவு திரைப்படத்தின் கதை முதலில் இவருக்குத்தான் கூறப்பட்டதாம்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. மேலும் சென்ற டிசம்பர் 31-ம் தேதி டிரைலர் வெளியாகி படு வைரலானது. இத்திரைப்படம் வரும் 11-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. இயக்குனர் சதுரங்க வேட்டை திரைப்படத்தை முடித்தவுடன் துணிவு திரைப்படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் தான் சொன்னாராம். சூர்யாவுக்கும் கதை பிடித்துப் போன நிலையில் வினோத் அதற்குள் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்ததும் அஜித் வினோத் இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்னாராம். இதனால் கதை அஜித்துக்கு சென்றதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.