சென்னை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய நிலை குறித்து தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 0-கால சட்டமன்ற விவாதங்களின் சிறப்புகளைப் பற்றியும், தற்போது மாறிவரும் அரசியல் சூழல் குறித்தும் அவர் பல சகருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, நான் சிறுவயதில் சட்டமன்றத்திற்கு எனது தந்தையுடன் சென்று, அங்குள்ள கேலரியில் அமர்ந்து விவாதங்களைப் பார்த்திருக்கிறேன். முன்னாள் முதல்-அமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, எனது அப்பா குமரி அனந்தன் போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்தில் சட்டமன்ற விவாதங்களைப் பார்ப்பதற்கே மிகுந்த ஆசையாக இருக்கும். அந்தச் சபையைப் பார்க்கும்போது, ‘இது ஒரு நாகரிகமான சபை, மாண்புமிகு தலைவர்கள் அமர்ந்திருக்கின்ற சபை’ என்ற பெருமிதமான எண்ணம் தோன்றும்.”
தற்போது தமிழக சட்டமன்றத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மிகவும் சிறப்பாக வழிநடத்தி வருவதாகப் பாராட்டிய தமிழிசை, அதே நேரத்தில் அவரே சலிப்படைந்து, வெறுத்துப் போகும் அளவுக்கு சிலரது நடவடிக்கைகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இப்போது மக்கள் அனைவரும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்க்கிறார்கள்; குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் இதைக் கவனித்து வருகிறார்கள். இது வரவேற்கத்தக்க ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால், முன்னாள் இருந்தது போல சட்டமன்றம் நாகரிகமான விவாதங்கள் நடைபெறும் சபையாக இருக்க வேண்டும். அதன் மரபையும் மாண்பையும் அனைவரும் பாதுகாக்க வேண்டும். சட்டமன்றத்தை ஒரு நாகரிகமான அரசியல் மன்றமாக மாற்றுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்” என்று தெரிவித்தார்.
