பிக்பாஸில் இந்த வாரம் முக்கிய பிரபலம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இது சென்ற அக்டோபர் 9-ம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்பாக தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி, ஜிபி முத்து, அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் உள்ளிட்டோர் இந்த போட்டியில் பங்கேற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 நபர்கள் மட்டுமே இருக்கின்றார்கள். 90 நாட்களை நெருங்கியுள்ள நிலையில் முடியும் தருவாயில் இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர் ரக்ஷிதா வெளியேற்றப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.