திருச்சியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமை தாங்க ஒருங்கிணைப்பாளர்கள் உதுமான் அலி, பால்பாண்டி என பலர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்பபடி காலவரையின்றி முடக்கபட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும்,  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பு ஊதியம், தினக் கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு, எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர்கள் ஆகிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.