திருக்குவளை பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை துணை மின் நிலையத்தில் மேலப்பிடாகை மின் பாதையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதன் காரணமாக இந்த மின் பாதையில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் வாழக்கரை, மேலப்பிடாகை, மடப்புரம், மீனம்பாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை செய்யப்படுகின்றது. இந்த தகவலை நாகை தெற்கு உதவி செயற்பொறியாளர் ராஜ மனோகர் தெரிவித்துள்ளார்.