கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மேல்பாடியை அடுத்திருக்கும் விண்ணம்பள்ளி ஊராட்சியில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றவும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மானியம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் பங்கேற்று விவசாயிகளிடம் தரிசு நிலங்களை எப்படி விளைநிலங்களாக மாற்றி பண்படுத்துவது என்பது பற்றியும் வேளாண்துறை திட்டங்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி வரும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.