வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்ற தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கின்றது. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட போஸ்டர்களின் டிசைன்களில் தமிழ் மொழியை புறக்கணித்து ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டு இருக்கின்றார்கள். மேலும் தெலுங்கு ட்ரைலருக்கான அறிவிப்பு போஸ்டர் வாரிசுடு என்ற தலைப்பு மட்டும் தெலுங்கில் போடப்பட்டிருந்தது. தெலுங்கு தயாரிப்பாளர், தெலுங்கு இயக்குனர், தெலுங்கு இசை அமைப்பாளர் என வாரிசு திரைப்படத்தில் தெலுங்கு வாசம் அதிகமாகவே வீசுகின்றது. இத்த திரைப்படத்திற்காக வெளியிடப்படும் போஸ்டர்களில் அதிகமாக ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி இருக்கின்றது. விளம்பர போஸ்டர்கள் கூட ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டிருக்கின்றது. படம் வெளியாக இன்னும் ஆறு நாட்கள் இருக்கின்ற நிலையில் இனிமேல் வரும் போஸ்டராவது தமிழில் வெளியிடுவார்களா படக்குழுவினர்.?